சைனீஸ் காலிஃப்ளவர் வித் கிரேவி செய்முறை / Chinese Cauliflower with Gravel Recipe !





சைனீஸ் காலிஃப்ளவர் வித் கிரேவி செய்முறை / Chinese Cauliflower with Gravel Recipe !

0
தேவையானவை

சிறிய காலிப்ளவர் - ஒன்று

கார்ன்ஃப்ளார் - 3 டேபிள் ஸ்பூன்

அஜினோமோட்டோ - 1/4 ஸ்பூன்

வெங்காய தாள் - ஒரு கொத்து

பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்)

பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

மைதா - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - கொஞ்சம்

வெங்காயம் - 1/2

ரெட் சில்லி - 3 (பொடியாக நறுக்கவும்)

சோயா சாஸ் - 3 ஸ்பூன்

செய்முறை :
 சைனீஸ் காலிஃப்ளவர் வித் கிரேவி

முதலில் காலிஃப்ளவரை பூப்பூவாக பிரித்து கொள்ள வேண்டும் .பிறகு ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து 

பின் அதில் காலிஃப்ளவரை 2 நிமிடங்கள் வேக வைத்து தண்ணீரை வடிகட்ட வேண்டும்

பிறகு இந்த தண்ணீரை கிரேவிக்கு பயன்படுத்த தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் .

பின் மைதா, கார்ன்ஃப்ளார், அஜின மோட்டோ, 1/4 ஸ்பூன் சோயா சாஸ், உப்பு, சிறிது சில்லி பௌடர், 

சிறிது பூண்டு எல்லா வற்றையும் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும் .

பிறகு இந்த மாவில் காலி ஃப்ளவரை நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பின் மற்றொரு பானில் சிறிது எண்ணெய் விட்டு அதில் பூண்டு, பச்சை மிளகாய் & ரெட் சில்லி போடவும். 

பிறகு பொடியாக அரிந்த வெங்காயம் & வெங்காயத்தாள் போட்டு வதக்க வேண்டும்

வெங்காயம் வாசம் போன பின் சோயா சாஸ் சேர்த்து காலிஃப்ளவர் வெந்த தண்ணி ஊற்றி கொதிக்க விட வேண்டும் 

பிறகு 2 ஸ்பூன் கார்ன்ஃப்ளாரை சிறிது நீரில் குழைத்து கிரேவியில் கலக்க வேண்டும் . 

அதன் பின்னர் பரிமாறும் பொழுது பொரித்த காலிஃப்ளவர் மீது சூடான கிரேவி ஊற்றி உடனடியாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)