பிரெட் சமோசா செய்வது எப்படி?

பிரெட் சமோசா செய்வது எப்படி?

0
காலம், குளிர்காலம் என்றாலே சூடான தின்பண்டங்கள் சாப்பிடுவது வழக்கம். சாப்பிட என்ன இருக்கு என்று எல்லாருமே கேட்டிருப்போம். அதாவது ஸ்நாக்ஸ் மட்டும் தான் அவ்வாறு கேட்போம். 
பிரெட் சமோசா
நாடு முழுவதும், அந்தந்த மாநிலம், சமூகத்திற்கு ஏற்றவாறு பலவிதமான தின்பண்டங்கள் இருக்கின்றன. 

ஆனால், சமோசா என்பது நாடு முழுவதுமே பிரபலமாக இருக்கக்கூடிய சுவையான மற்றும் வெவ்வேறு விதமாக செய்யக்கூடிய ஒரு தின்பண்டமாகும். 

வெறும் வெங்காயம் மட்டும் ஃபில்லிங் செய்யப்பட்டு, குட்டி குட்டியாக கையடக்க சமோசாக்கள் முதல் பலவிதமான ஃபில்லிங் உடன் பெரிய சைஸ் சமோசா வரை, நீங்கள் விரும்பும் வகையில் சமோசாக்கள் உள்ளன. 

அவை பச்சை மைதா மாவு சமோசா என்பது பட்டாணி அல்லது சுண்டல் (வெள்ளை கொண்டகடலை) உடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் 
மற்றும் மசாலா பொருட்களை உள்ளடக்கி எண்ணெயில் குறைந்த வேகாட்டில் உப்பலாக பெரியளவில் பொறித்தெடுத்து செய்யபடும் உயர் ரக வகையை சமோசா அல்லது கார சோமோசா என்று அழைக்கபடுகிறது. 
தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 10,

மைதா மாவு - 150 கிராம்,

பீன்ஸ் - 10,

கேரட், வெங்காயம் - தலா 2,

உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 1,

கரம் மசாலாத் தூள் - சிறிதளவு,

இஞ்சித் துருவல் - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை:

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். 

கேரட்டைத் துருவிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும்.வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கி... பீன்ஸ், கேரட், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். 

இதில் பிரெட் தூள், உருளைக் கிழங்கை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும்.பிசைந்த மைதா மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, உள்ளே உருண்டையை வைத்து, சமோசா வடிவில் மூடவும். 
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு சமோசாவாக போட்டு பொரித் தெடுக்கவும். மாலை வேளையில் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். சைட் டிஷ் தேவை இல்லை.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)