மட்டன் நல்லி எலும்பு குழம்பு செய்வது எப்படி?





மட்டன் நல்லி எலும்பு குழம்பு செய்வது எப்படி?

மட்டன் நல்லி எலும்பு குழம்பு சாதம், தோசை, புலாவ், சப்பாத்தி க்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்க லாம்.  
மட்டன் நல்லி எலும்பு குழம்பு
தேவையான பொருட்கள் :

மட்டன் நல்லி எலும்பு - 20

பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி - 5 தயிர் - 1/2 கப்

இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

கொத்த மல்லி - 1 கைப்பிடி

எண்ணெய் - தேவையான அளவு

பட்டை - சிறிது கிராம்பு - 5

ஏலக்காய் - 4

பிரிஞ்சி இலை - 2.
முகேஷ் அம்பானி கார் பற்றி தெரிந்து கொள்ள !
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டன் நல்லி எலும்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக பொன்னிற மானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
விமானத்தின் உள்ளே சுவாசிப்பது எப்படி? 
இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போன வுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் மட்டன் நல்லி எலும்பை சேர்த்து பிரட்டவும். கறி நன்கு வதங்கி யதும் உப்பு, தேவை யான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.
12 விசில் போடவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித் தவுடன் தக்காளி, நன்கு அடித்த தயிர் சேர்த்து கொதிக்க விடவும்.

அடுப்பை மிதமாக எரிய விட்டு எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும்.
விமானத்தின் ஜன்னல் இப்படி இருக்க காரணம் என்ன?
கடைசியாக நறுக்கிய கொத்த மல்லி தூவி பரிமாறவும். சூப்பரான மட்டன் நல்லி எலும்பு குழம்பு ரெடி.
Tags: