வெண்ணெயில் உள்ள சத்துக்கள்... எந்த உணவுடன் சாப்பிடுவது நல்லது?

0

நவநாகரிகமாக வளர்ந்து விட்ட இன்றைய யுகத்தினர் உடல் நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். 

வெண்ணெயில் உள்ள சத்துக்கள்... எந்த உணவுடன் சாப்பிடுவது நல்லது?

அதே நேரத்தில், நாகரிகம் என்ற பெயரில் கண்ட உணவுகளை எடுத்துக் கொண்டு திண்டாடுவது தான் மிச்சம். 

பழங்காலத்தில் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்த வெண்ணெய் இன்றைக்கு பயன்படுத்துவதே இல்லை.

ஜாக்கிரதையாக போ தாயி... அன்பா பாசமா இருந்துட்டு போவோம்... ஞானகுருக்கள் !

வெண்ணெய் என்றவுடன் அது சில வீடுகளில் மாட்டியிருக்கும் ஃப்ரேம் போட்ட படத்தில் இருக்கும் கிருஷ்ணர், அவரது காதைத் திருகி கோபத்துடன் முறைக்கும் யசோதை தான் நினைவுக்கு வரும்.

கறந்த பாலை காய்ச்சி, உறையவைத்து எடுத்து, அதில் கடைந்த வெண்ணெயை குழந்தைகளின் கை நிறைய அப்பிய காலம் மலையேறி விட்டது. 

வெண்ணெயில் உள்ள சத்துக்கள்... எந்த உணவுடன் சாப்பிடுவது நல்லது?

இன்றோ, எப்போதும் சாக்லேட் பார்களையும், சிப்ஸ் வகைகளையும் கையில் வைத்து சுழலும் சுட்டீஸ்களைத் தான் அதிகம் பார்க்க முடிகிறது. 

நாவில் நீர் ஊற வைக்கும் ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் !

வளர்ந்து விட்ட ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் பல பாரம்பரிய உணவு முறைகளைத் தொலைத்து விட்டோம்.

வெண்ணெயில் உள்ள சத்துக்கள் குறித்தும் அதன் நன்மை, தீமைகள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வெண்ணெயில் உள்ள சத்துக்கள்

வெண்ணெயில் உள்ள சத்துக்கள்

'கொழுப்புச் சத்து மட்டும் தான் அதிகம் உள்ளது. தவிர, 'வைட்டமின் ஏ’ உள்ளது. இது கண்ணுக்கு மிகவும் நல்லது. 

புரதம், கார்போஹைட்ரேட், மாவுச் சத்து போன்ற வேறு எந்தச் சத்துகளும் இதில் இல்லை.'

வெண்ணெயை குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? எப்போது கொடுக்கலாம்?

வெண்ணெயை குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? எப்போது கொடுக்கலாம்?

'வளரும் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். குறிப்பிட்ட வயதில் சரியான எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெயை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால், உடல் புஷ்டியாகும். 

அதாவது, நான்கு வயதில் ஒரு குழந்தை 18 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகளுக்கு வயது கூடக்கூட எடை குறையும். 

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் உணவு !

இது போன்ற நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு வெண்ணெயைக் கொடுக்கலாம். பொதுவாகக் காலை நேரங்களில் சாப்பிடலாம். மாலை, இரவு வேளைகளில் சிறிதளவு கொடுக்கலாம்.'

வெண்ணெயை  யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

வெண்ணெயை  யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

'விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம். காசநோய் உள்ளவர்களுக்கும் நல்லது. 

இது அதிக நேரத்துக்கு உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். உடல் எடை குறைவான டீன் ஏஜ் இளைஞர்களும் ஓரளவுக்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது.'

வெண்ணெயை யாரெல்லாம் தவிர்க்கலாம்?

வெண்ணெயை யாரெல்லாம் தவிர்க்கலாம்?

'40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் இல்லாமல் இருந்தால் ஓரளவு எடுத்துக் கொள்ளலாம். 

மற்றவர்கள், வெண்ணெய் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.  வெண்ணெயில் உள்ள கலோரிகள் எளிதில் கரையாது. 

மேலும் சர்க்கரை நோயாளிகள், இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும். 

சர்க்கரை நோயாளிகள் உடலில் நோன்பு என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும்?

ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவும், சக்தியை அதிகரிக்கச் செய்யும். 

உடல் எடை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்து மேலும் எடையைக் கூட்டிவிடும்.'

வெண்ணெய் நல்லதா? நெய் நல்லதா?

வெண்ணெய் நல்லதா? நெய் நல்லதா?

'வெண்ணெயைக் காட்டிலும் நெய் மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு தினமும் நெய் கொடுக்கலாம். 

சின்னக் குழந்தைகளுக்கு வெண்ணெயை வாரத்துக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரையிலும், தினமும் ஐந்து முதல் பத்து கிராம் வரை சேர்த்துக் கொடுக்கலாம்.  

வளரும் குழந்தைகள் தினமும் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். சூடான சிற்றுண்டிகளில் நெய் பயன்படுத்தினால், வாசனை ஊரைத் தூக்கும், சாப்பிடவும் தூண்டும். உடல் வெப்பத்தைக் குறைக்கும்.

பெண்களிடம் அதிகரிக்கும் ஆண் தன்மை மீசையும், தாடியும் முளைக்கிறது !

நெய் சேர்க்கும் போது உணவில் கண்டிப்பாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.ஆறிப் போன உணவு, இரவு நேரங்களில் மற்றும் அசைவ உணவுகளுடன் நெய் பயன்படுத்தக்கூடாது.

நெய் காலை நேரங்களில் சூடான உணவுகளில் கலந்து கொடுங்கள்.  இதனால் குழந்தைகளுக்கு உடல் வெப்பத்தை குறைத்திடும். 

பெரியவர்கள்

பெரியவர்கள்

குழந்தைகளைத் தவிர, விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம். 

காச நோயால் அவதிப்படுபவர்களுக்கு வெண்ணெய் மிகவும் நல்லது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுத்திடும்.

வெண்ணெயை எந்த உணவுடன் சாப்பிடுவது நல்லது?

வெண்ணெயை எந்த உணவுடன் சாப்பிடுவது நல்லது?

'பெரும்பாலும் வெண்ணெயை பிரெட் மீது தடவியே பயன்படுத்துவோம். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி நமக்கே சில வேளைகளில் சலிப்பைத் தரும். 

கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை எப்படி பராமரிப்பது !

எனவே, சர்க்கரை பொங்கல், சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுடன் சிறிதளவு சேர்ப்பது சுவையைக் கூட்டும். 

சூடான சாம்பாரில் சேர்த்து சாப்பிடலாம். தோசை சுடும் போது வெண்ணெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வெண்ணெய் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?

வெண்ணெய் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?

'பசி எடுக்கும் தன்மையைக் குறைத்து விடும். அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை 

தொடர்வது மட்டுமின்றி, உடல் பருமன் கூடி, குண்டான உடல் தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.ஆகவே, கவனம் தேவை.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)