அருமையான பிரெட் பக்கோடா செய்வது எப்படி?





அருமையான பிரெட் பக்கோடா செய்வது எப்படி?

0
குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும் அளவுக்கு சுவையா இருக்கும். பிரெட் பக்கோடாவா அப்படினு ரொம்பவே ஆச்சரியப் படுவாங்க.
அருமையான பிரெட் பக்கோடா செய்வது எப்படி?
அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த பிரெட் பக்கோடா. அது செய்றதும் ரொம்ப ரொம்ப ஈஸி வீட்ல எக்ஸ்ட்ரா பிரட் இருக்கு. 

ரொம்ப பசிக்கிற மாதிரி இருக்கு எதுவுமே பண்ண இல்ல அப்படின்னா இந்த மாதிரி சிம்பிளா யூஸ் பண்ணி பிரட்ல பக்கோடா செஞ்சி நிறைய சாப்பிடலாம். 

ரொம்ப சுவையாவும் இருக்கும் எல்லாருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும். அந்த அளவுக்கு டேஸ்ட் அருமையா இருக்கும். இந்த சுவையான பிரட் பக்கோடா  சுலபமான மாலை நேர சிற்றுண்டி தான்.

உங்களுக்கு மாலை நேரத்துக்கு இந்த மழைக்கு இதமா ஏதாவது சாப்பிடணும் அப்படின்னு தோணுதா அப்போ நீங்க கண்டிப்பா இந்த பிரட் பக்கோடா செய்து சாப்பிடலாம். உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். 

சரி வாங்க இந்த சுவையான பிரட் பக்கோடா எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

தேவையானவை:

பிரெட் – 10 துண்டுகள்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்,

பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – ஒன்று,

கறிவேப்பிலை – சிறிதளவு,

எண்ணெய் – 250 மில்லி,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பிரெட் துண்டை எடுத்துக் கொண்டு அதன் ஓரத்தை கட் செய்து நீக்கவும். நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை பிரெட்டுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்ததை பக்கோடாக்க ளாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
சட்னி அல்லது சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன். ஒரு பொருள் சுத்திகரிக்கப் பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும். 

சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும். 

மாவுச் சத்து அதிகமுள்ள சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகள் உடலின் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். 

இந்நிலை நீண்ட நாள் தொடர்ந்தால், சர்க்கரை நோய் பாதிக்கலாம். பிரெட்டை, எந்த வடிவத்தில் உட்கொள்கிறோம் என்பது கவனிக்கத்தக்கது. 

பெரும்பாலும் பட்டர் சேர்த்தோ, ஜாம் தடவியோ, ரோஸ்ட்டாகவோ, சாண்ட்விச்சாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ உட்கொள்ளப் படுகிறது. 
இவற்றில் சேர்க்கப்படும் எண்ணெய், காய்கறிகள் மற்றும் வறுக்கப்படும் நேரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக பிரெட் கடினமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும் என்பதால், செரிமானம் மிக மெதுவாகவே நடைபெறும். 

அதனால், மூச்சுக்குழாய் பாதித்து சளித் தொற்று ஏற்படலாம். மற்றவர்களை விட குழந்தைகளுக்குச் சளித் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)