மஷ்ரூம் சூப் செய்முறை | Mushroom Soup Recipe !





மஷ்ரூம் சூப் செய்முறை | Mushroom Soup Recipe !

0
தேவையானவை:

காளான் (ஒன்றை நான்கு துண்டாக நறுக்கவும்) – ஒரு கப்,

சின்ன வெங்காயம் – 5,

பெரிய வெள்ளை வெங்காயம் – ஒன்று,

பூண்டு – 2 பல்,

பச்சை மிளகாய் – 2,

பார்ஸ்லி – ஒரு கைப்பிடியளவு,
மிளகுத் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,

வெண்ணெய் – 2+1 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
மஷ்ரூம் சூப் செய்முறை
சின்ன வெங்காயம், பெரிய வெள்ளை வெங்காயம், பச்சை மிளகாய், தோல் நீக்கிய பூண்டு எல்லா வற்றையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், 

நறுக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பாதி வதங் கியதும் காளான், பார்ஸ்லியை சேர்த்துப் பிரட்டி, 

மிளகுத் தூள், உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து காளான் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, 
ஹாண்ட் பிளண்டரில் அரைக்கவும் (அல்லது ஆறியதும் மிக்ஸியில் அரைக்கலாம்).

கலவையை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு இறக்கி, 

ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் (கூடுதல் சுவைக்கு க்ரீமும் சேர்க்கலாம்) சேர்த்துப் பரிமாறவும்.’
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)