ஈசி கிட்ஸ் பாஸ்தா செய்முறை | Easy Kids Pasta Recipe !





ஈசி கிட்ஸ் பாஸ்தா செய்முறை | Easy Kids Pasta Recipe !

0
தேவையானவை

பாஸ்தா - ஒரு கப்

பூண்டு - 2

மிளகு தூள் - அரை தேக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் / பட்டர் - ஒன்றரை தேக்கரண்டி

ட்ரைட் பார்ஸ்லி, ரோஸ்மேரி, தைம், ஒரிகனோ - கால் தேக்கரண்டி

பால் - 2 மேசைக் கரண்டி

சீஸ் - ஒரு மேசைக் கரண்டி

காரட், பட்டாணி, சோளம், ப்ரோக்கலி - கால் கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :
ஈசி கிட்ஸ் பாஸ்தா
முதலில் வெங்காயம், பூண்டு, காரட், ப்ரோக்கலி அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் பாஸ்தா சேர்த்து 8 முதல் 10 நிமிடம் வரை வேக வைக்கவும் 

(பாஸ்தா வகையை பொருத்து வேகும் நேரம் மாறலாம்).

வெந்ததும் தண்ணீரை முற்றிலும் வடிக்கட்டி மேலே அரை தேக்கரண்டி எண்ணெய் தெளித்து ஆற விடவும்.

பின்பு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி சூடானதும் 

பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.

வதக்கிய வற்றுடன் பால் சேர்த்து ட்ரைட் பார்ஸ்லி, ரோஸ்மேரி, தைம், ஒரிகனோ, மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.

வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறவும். உடனே அடுப்பை அணைத்து விட்டு மேலே சீஸ் தூவி பரிமாறவும்.

சுலபமாக செய்யக் கூடிய சுவையான கிட்ஸ் பாஸ்தா ரெடி.பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)