கிட்ஸ் கேரட் புலாவ் செய்முறை / Kids Carrot Pulau Recipe !





கிட்ஸ் கேரட் புலாவ் செய்முறை / Kids Carrot Pulau Recipe !

0
தேவையானவை

பாஸ்மதி அரிசி - 2 கப்

புதினா இலைகள் - 10

கொத்த மல்லித் தழை - ஒரு கைப்பிடி

தயிர் - 2 தேக்கரண்டி

லவங்கம் - 2

ஏலக்காய் - 2

பிரியாணி இலை - 1

சீரகம் - ஒரு தேக்கரண்டி

எலுமிச்சைச் சாறு - ஒரு மேசைக்கரண்டி

பூண்டுப்பல் - 4

வெங்காயம் - 2

காரட் துருவல் – 4 கப்

தேங்காய் பால் – 2 கப்

பச்சை மிளகாய் - 4 கீறியது (குழந்தையின் காரத்திற்கேற்ப)

பட்டை - 2

முந்திரி பருப்பு - 10

நெய் அல்லது எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை :
கிட்ஸ் கேரட் புலாவ்

முதலில் பாசுமதி அரிசியை 2 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி சீரகம், பட்டை, இலவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.

அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்

பிறகு பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் புதினா இலைகள் மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விடவும்.

வதங்கியதும் பாசுமதி அரிசியை ஊற வைத்திருந்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் அதில் அர்சியை சேர்த்து கிளறி விடவும்.பிறகு 2 கப் தேங்காய்பாலை ஊற்றி கிளறவும். 

மேற் கூறியவற்றை மிதமானத் தீயிலேயே செய்யவும்

அரிசி பாதியளவு வெந்ததும் அதில் எலுமிச்சை சாறை ஊற்றி கொத்த மல்லித் தழை போட்டு, 

நன்றாக கிளறி தீயை குறைத்து அதை ஒரு குக்கரில் கொட்டி மூடி விசில் போடவும்.

10 நிமிடங்கள் சிறுதீயிலேயே வேக விடவும். வெந்ததும் திறந்து சிறிது நேரம் சூடு ஆற விடவும்

ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளைப் போட்டு அலங்கரித்து பரிமாறவும். 

குழந்தைகளின் வளர்ச்சி க்கும் கண் பார்வைக்கும் தேவையான வைட்டமின் A மற்றும் 

நிறைய சத்துக்கள் இருப்பதால் காரட்டை அவர்களுக்கு பிடிக்கும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)