சுவையான ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?





சுவையான ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?

மக்காச் சோளம் அல்லது நாட்டுச் சோளம் என்று அழைக்கப்படும் சோளத்தில் பல ஊட்டச்சத்து நன்மைகள் உள்ளன. ஸ்வீட் கார்ன் யாருக்குத்தான் பிடிக்காது. 
சுவையான ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?

இப்போதெல்லாம் பீட்சா, பாஸ்தா, பர்கர் முதல் சாலட் வரை சுவையை அதிகரிக்க ஸ்வீட் கார்ன்தான் பயன்படுத்தப் படுகிறது. ஸ்வீட் கார்ன் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது. 

இனிப்பு சோளத்தில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. 

இனிப்பைத் தவிர்க்க வாயு குறையும்!

அதே நேரத்தில், வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தை ஜெல் ஆக மாற்றுவதன் மூலம் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.  

ஸ்வீட் கார்னில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. 

வேக வைத்த ஸ்வீட் கார்ன் அல்லது கரியில் வறுத்த ஸ்வீட் கார்ன் ஒரு கப் மழை நாளில் நீண்ட பயணத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இனி ஸ்வீட் கார்ன் கொண்டு சுவையான ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி? என்று இங்கே பார்ப்போம்.

தேவையானவை: 

காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், 

நறுக்கிய கேரட் – 2 டீஸ்பூன், 

கோஸ் – 50 கிராம், 

உதிர்த்த ஸ்வீட் கார்ன் – 3 டேபிள் ஸ்பூன், 

பீன்ஸ் – தலா 2 (நறுக்கிக் கொள்ளவும்), 

சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், 

வினிகர் – அரை டீஸ்பூன், 

அஜினமோட்டோ – கால் டீஸ்பூன், 

வெங்காயத்தாள் – சிறிதளவு, மிளகுத்தூள், 

உப்பு – தேவையான அளவு. 
கோடையில காரம் சாப்பிட்டா !
செய்முறை: 
சுவையான ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?

கடாயில் காய்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும், 

பாதி வெந்தவுடன்… உப்பு, மிளகுத்தூள், வினிகர், அஜினமோட்டோ சேர்த்து, சோள மாவை தண்ணீரில் கரைத்து 
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம்
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கெட்டியாக வரும் போது இறக்கி, கிண்ணத்தில் ஊற்றி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.
Tags: