உருளைக்கிழங்கை மொத்தமாக வாங்கி சேமித்து வைப்பதை விட,தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்துவது நல்லது. சேதமடைந்த உருளைக்கிழங்கை அவ்வப்போது அகற்றி விடுவது நல்லது.
மற்ற உருளைக்கிழங்கு முற்றிலும் வறண்டு, நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து, குளிச்சியான, இருட்டான இடத்தில் சேமித்து வைக்கவும். இப்படி செய்வதால் முளைவிடுவது குறைக்கப்படும்.
உருளைக்கிழங்குடன் வெங்காயத்தை சேர்த்து சேமித்து வைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
பெண்கள் மட்டும் தான் குடை பயன்படுத்த வேண்டுமா?
இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைப்பதால் முளைவிடுதல் ஊக்குவிக்கப்படும். ஆனால் இந்த பழக்கத்திற்கு அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை.
முளைவிட்ட உட்கொள்வதால் என்ன பிரச்சினை ஏற்படும்?
முளைவிட்ட உருளைக்கிழங்கில் க்ளைக்கோ ஆல்கலாய்டு அளவு அதிகம் இருப்பதால் மனிதர்கள் இதனை உட்கொள்வதால் நச்சுத்தன்மை அதிகரிக்கும்.
முளைவிட்ட உருளைக்கிழங்கை உட்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகிறது.
இதய பாதிப்புகள் முதல் வயிற்று கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
மிக தீவிர நிலையில் உயிரிழக்கும் அபாயமும் உள்ளன. பிறப்பு குறைபாட்டிற்கான அபாயமும் அதிகரிக்கின்றன.
ரயில் நிலையத்தில் மஞ்சள் நிற பலகையின் பின்னணி... இது தெரியாம போச்சே !
உருளைகிழங்கை தோல் உரித்து பயன்படுத்துவதால், பொரிப்பதால் அல்லது முளையை அகற்றுவதால் அதன் க்ளைக்கோ ஆல்கலாய்டு அளவு குறைந்தாலும்,
அதன் நச்சுத்தன்மை குறைவதாக போதுமான சான்றுகள் இல்லை. ஒட்டு மொத்தமாக, முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடாமல் இருப்பது பாதுகாப்பான வழிமுறையாகும்.