மைதா இல்லாமல் கேக் செய்யும் ரகசியம் தெரியுமா?





மைதா இல்லாமல் கேக் செய்யும் ரகசியம் தெரியுமா?

0

உடலுக்கு கேடு விளைவிக்கும் மைதா பளபளப்பாக இருப்பதற்காக ரசாயனங்கள் சேர்க்கப் படுகின்றன. 

மைதா இல்லாமல் கேக் செய்யும் ரகசியம் தெரியுமா?

எனவே செரிமானப் பிரச்சனைகள் முதல் அலர்ஜி, என்று பலவிதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும் மைதாவை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து பலரும் கூறி வருகின்றனர். 

இருப்பினும் பரோட்டா பிரியர்களும் குறையவில்லை, பேக்கரி உணவுகளின் விற்பனைக்கும் குறைவில்லை. ஒரு சில உணவுகள் மைதாவில் செய்தால் தான் சுவையாக இருக்கும். 

குறிப்பாக பேக்கிங் என்று வரும் போது மைதா தவிர்க்க முடியாத ஒரு அடிப்படை பொருளாக இருக்கிறது.

மைதா இல்லாமல் பேக்கிங் செய்ய முடியுமா, கேக் செய்ய முடியுமா என்ற கேள்வி எழும்பலாம்! ஆனால் மைதாவிற்கு மாற்றான ஆரோக்கியமான மாவுப்பொருட்கள் இருக்கின்றன. 

மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா?

மைதாவில் செய்தால் எவ்வளவு சுவையாக வருமோ அதே போல ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி பேக்கிங் செய்யலாம் என்று பிரபலங்கள் கூறி இருக்கின்றனர். 

மைதாவுக்கு மாற்று உணவுகள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஏன் மைதாவை தவிர்க்க வேண்டும்.? 

மைதா இல்லாமல் கேக் செய்யும் ரகசியம் தெரியுமா?

மைதா மாவு சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் எளிதில் சமைக்கக்கூடிய மாவாகவும், விலை குறைவாகவும் இருக்கிறது. 

ஆனால் மைதா தயாரிப்பில், மைதா அந்த வெண்மையான பளபளப்பான நிறத்தை பெறுவதற்கு பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பலமுறை சுத்திகரிக்கப்படுகிறது. 

இதனால் மைதாவில் எந்த விதமான ஊட்டச்சத்துக்களும் இல்லை. குறிப்பாக நார்சத்து இல்லாத ஒரு மாவாகத் தான் மைதா இருக்கிறது என்பதால் மைதாவை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.

தேங்காய் மாவு: 

மைதா இல்லாமல் கேக் செய்யும் ரகசியம் தெரியுமா?

தேங்காய் மாவு என்று கேட்பதற்கு மிகவும் புதிதாக இருக்கலாம். ஆனால் பல இடங்களில் கோதுமை மற்றும் மைதாவுக்கு மாற்றாக தேங்காய் மாவு பயன்படுத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. 

தேங்காய் துருவி அதிலிருந்து பால் எடுத்த பின்பு மீதம் இருக்கும் அந்த தேங்காய் துருவலை உலர்த்தி மாவாக அரைப்பது தான் தேங்காய் மாவு. 

தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி?

நம் வீட்டிலேயே இதனை செய்து கொள்ளலாம். இதில் எந்த விதமான பக்க விளைவும் கிடையாது. மைதாவுக்கு மாற்றான ஆரோக்கியமான ஒரு மாவாகவும் இது இருக்கிறது.

பாதாம் மாவு: 

மைதா இல்லாமல் கேக் செய்யும் ரகசியம் தெரியுமா?

பாதாம் என்பது உடலுக்கு வலிமை அளிக்கும், விட்டமின் ஈ சத்து நிறைந்த மற்றும் மூளைக்கு சுறுசுறுப்பாகும் கொட்டை வகைகளில் ஒன்று. 

அதே நேரத்தில் பேக்கிங் செய்வதற்கு மைதாவுக்கு மாற்றான மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் பாதாமும் ஒன்று. 

குறிப்பாக, கீடோ உணவுகள் என்று கூறப்படும் அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்கள் பாதாம் மாவைப் பயன்படுத்தலாம். 

இதன் மூலம் செய்யப்படும் இனிப்புகளும் உணவுகளும் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கின்றன.

மரகோதுமை: 

மைதா இல்லாமல் கேக் செய்யும் ரகசியம் தெரியுமா?

கோதுமையின் மற்றொரு ஆரோக்கியமான வகை தான் மரகொதுமை. இது குட்டு மற்றும் பப்பாரை என்றும் அழைக்கப் படுகிறது. 

மர கோதுமையைப் பயன்படுத்தும் பெரும்பாலான நாடுகளில் மக்கள் இதனை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே சமைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். 

ஹை ஹீல்ஸை தவிர்க்கவும் !

ஆனால் இதனை நீங்கள் அன்றாட உணவிலும் பயன்படுத்தலாம். பேக்கிங் செய்வதற்கு இந்த மரக்கோதுமை மாவை மைதாவுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

சோயா மாவு: 

மைதா இல்லாமல் கேக் செய்யும் ரகசியம் தெரியுமா?

வெஜிடேரியன் மற்றும் வீகன்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக தான் சோயா இருந்து வருகிறது.

சோயா பால், சோயா பீன்ஸ், சோயா சங்ஸ் என்று சோயாவிலிருந்து பல விதமான உணவுகள் தயாரிக்கப்படுகிறது. 

கேக் செய்வதற்கு மிகவும் ஏற்ற மாவுகளில் சோயா மாவும் ஒன்று. இது மைதாவுக்கு மிகச் சிறந்த மாற்றாக இருக்குறது.

ஆரஞ்சு பழங்களின் பயன்கள் !

ராகி மாவு: 

மைதா இல்லாமல் கேக் செய்யும் ரகசியம் தெரியுமா?

அன்றாடம் நாம் பயன்படுத்தக்கூடிய அரிசி மாவு, சப்பாத்தி மாவுக்கு மாற்றாக சிறு தானிய வகைகளில் காலங்காலமாக, கேழ்வரகு என்று கூறப்படும் ராகி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த ராகி மாவு அனைத்து விதமான கேக் குக்கீஸ் செய்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. 

மைதாவுக்கு மிகவும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த, சுவையான மாற்றாக ராகி மாவு கருதப்படுகிறது.

உதடு மற்றும் வாய் பராமரிப்பு !

குவினா மாவு: 

மைதா இல்லாமல் கேக் செய்யும் ரகசியம் தெரியுமா?

சமீபகாலமாக அரிசிக்கு மாற்றாக மதிய உணவில் குவினாவை சமைத்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வந்துள்ளது. 

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதால் மட்டுமல்லாமல் சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உதவுகிறது. 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள குவினாவை, மைதா மாவுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)