பொன்னாங்கண்ணிக் கீரை பொரிச்ச குழம்பு செய்முறை / Spinach Fried Curry Recipe !





பொன்னாங்கண்ணிக் கீரை பொரிச்ச குழம்பு செய்முறை / Spinach Fried Curry Recipe !

0
தேவையானவை:

பொன்னாங்கண்ணிக் கீரை – ஒரு கட்டு,

பாசிப்பருப்பு – 50 கிராம், 

சாம்பார் பொடி- 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:

வெங்காய வடகம் – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் - அரை டீஸ்பூன்.

அரைக்க:

துருவிய தேங்காய் – கால் கப்,

சீரகம் – ஒரு டீஸ்பூன்.

கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை – சிறிதளவு.

செய்முறை:
பொன்னாங்கண்ணிக் கீரை பொரிச்ச குழம்பு
பொன்னாங்கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்யவும். பாசிப் பருப்பை குழைய வேக வைக்கவும். 

அரை டம்ளர் நீரில் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், கீரை சேர்த்து வேக விடவும். 

வெந்த பருப்பை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.

எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ள வற்றை அரைத்துச் சேர்க்கவும். 

மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, தாளிக்கக் கொடுத்த வற்றைத் தாளித்து சேர்க்கவும். 

இதனை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகவும் உபயோகிக்க லாம்.

குறிப்பு:

பொன்னாங் கண்ணிக் கீரை, கண் பார்வைக்கும், உடல் பளபளப்புக்கும் உறுதுணை புரியும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)