பூண்டு மணத்தக்காளி குழம்பு செய்முறை / Manathakkaali Curry Recipe !





பூண்டு மணத்தக்காளி குழம்பு செய்முறை / Manathakkaali Curry Recipe !

0
தேவையானவை:

உரித்த பூண்டு – அரை கப்,

மணத்தக்காளி வற்றல் – 6 டீஸ்பூன்,

வெல்லம், புளி – சிறிதளவு,

உதிர்த்த வெங்காய வடகம் – ஒரு டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – தேவையான அளவு,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

உப்பு – தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க:

மிளகு – 2 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 2,

சீரகம், தனியா – தலா ஒரு டீஸ்பூன்,

வெந்தயம் – அரை  டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
பூண்டு  மணத்தக்காளி குழம்பு
வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நீர் விட்டு நைஸாக அரைக்கவும். 

புளியைக் கரைத்து… உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து, கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 

எண்ணெயில் பூண்டை வதக்கி இதனுடன் சேர்க்கவும். 

பூண்டு பாதி வெந்ததும் மணத்தக்காளி வற்றல், வெங்காய வடகம் ஆகிய வற்றை வறுத்துப் போடவும். 

எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:

இந்தக் குழம்பை இளம் தாய்மார்கள் (பிரசவித்த பெண்கள்) சாப்பிட… தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். 

மேலும், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டால்… கட்டுப் பாட்டுக் குள் வரும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)