ஸ்பெஷல் அகர்கா செய்முறை | Special Agarka Recipe !





ஸ்பெஷல் அகர்கா செய்முறை | Special Agarka Recipe !

0
தேவையானவை:

அகர் அகர் ஸ்டிக் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கைப்பிடி அளவு,

தண்ணீர் – 2 டம்ளர்,

கருப்பட்டி (அ) வெல்லம் – முக்கால் கப்,

உப்பு – 1/4 டீஸ்பூன்,

தேங்காய்ப்பால் – அரை டம்ளர்,

முட்டை – ஒன்று (விரும்பாதவர்கள் கெட்டி தேங்காய்ப் பால் மட்டும் சேர்த்தும் செய்யலாம்),

பாண்டன் இலை (அ) லவங்கம் – ஒன்று,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
ஸ்பெஷல் அகர்கா
தேங்காய்ப் பாலுடன் முட்டையைச் சேர்த்து முள் கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கவும். 

பாண்டன் இலையைக் கழுவி தண்ணீரில் சேர்த்து, அதில் அகர் அகர் ஸ்டிக்கையும் சேர்த்து கொதிக்க விடவும்.

அகர் அகர் பாதி கரைந்ததும், கருப்பட்டி (அ) வெல்லம், உப்பு சேர்த்து நன்கு கரையும்வரை கொதிக்க விடவும். 

அனைத்தும் நன்கு கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

தேங்காய்ப்பால் – முட்டையை கொதிக்கும் கலவையில் சேர்த்து, முள் கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கியபடி இருக்கவும்.

தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு இன்ச் உயரத் துண்டுகள் வரும் படியான பெரிய தட்டில் ஊற்றி ஆற விடவும்.

இறுகியதும் துண்டுகள் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து கால் மணி நேரம் கழித்து சாப்பிடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)