கறி லக்ஸா செய்முறை | Curry Laxa Recipe !





கறி லக்ஸா செய்முறை | Curry Laxa Recipe !

0
தேவையானவை:

ரைஸ் நூடுல்ஸ் – 50 கிராம்,

தேங்காய்ப்பால் – 250 மில்லி,

டோஃபு – 200 கிராம்,

எலுமிச்சைச் சாறு – 3 டேபிள் ஸ்பூன்,

பீன்ஸ் ஸ்பிரவுட் (முளைகட்டிய பீன்ஸ்) – ஒரு கப்,

சோயா சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், புதினா, கொத்த மல்லித் தழை, சிறிது,

உப்பு – தேவைக்கேற்ப.

அரைக்க:

காய்ந்த மிளகாய் – 20,

வினிகர் – ஒரு டேபிள் ஸ்பூன்,

உப்பு – ஒரு டீஸ்பூன்,

முந்திரி 1/4 கப்.

செய்முறை:
கறி லக்ஸா
நூடுல்ஸில் கொதிநீர் சேர்த்து வடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்து சில்லி பேஸ்டை தயார் செய்யவும்.

டோஃபுகளை சிறுசிறு துண்டுக ளாக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் டோஃபுகளை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

அதே எண்ணெயில் சில்லி பேஸ்ட் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின் சோயா சாஸ், தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலக்கி, கூடுதலாக ஒன்றரை டம்ளர் தண்ணீர், உப்பு, கொத்த மல்லித்தழை சேர்த்துக் கொதிக்க விடவும்.

இரண்டு நிமிடம் கழித்து, வறுத்து வைத்திருக்கும் டோஃபுகளை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். 

அடுப்பி லிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இதை அப்படியே சூப்பாகவும் சாப்பிடலாம். 

அல்லது ஒரு கோப்பையில் வேக வைத்த நூடுல்ஸ் கொஞ்சம் சேர்த்து, அதன் மேல் டோஃபுவுடன் கறியைச் சேர்த்து,

அதன் மேல் ஸ்பிரவுட் பீன்ஸை பரவலாகச் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை தூவி, 

விரும்பினால் வறுத்த சின்ன வெங்காயத்தை தூவி, பின்னர் சுவைக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)