சூப்பரான சேமியா பால் ஐஸ் செய்வது எப்படி?





சூப்பரான சேமியா பால் ஐஸ் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் பிடிக்கும். அந்தக் காலத்தில் விதவிதமான சுவைகளில் ஐஸ்கிரீம் கிடையாது. 
சூப்பரான சேமியா பால் ஐஸ் செய்வது எப்படி?
சாதா ஐஸ் காலணாவுக்கும் சேமியா ஐஸ், ஜவ்வரிசி ஐஸ் போன்றவை அரையணாவுக்கும் கிடைக்கும். பிறகு பால் ஐஸ் வந்தது. பத்து பைசாவுக்குக் கிடைக்கும் அதன் நிறமும் சுவையும் இன்றும் நினைவில் நிற்கிறது. 

இன்று சாக்லேட், பட்டர் ஸ்காட்ச், பிஸ்தா, ஸ்ட்ராபெர்ரி, கார்னேட்டோ, இத்தாலியன் பிளாக்கரண்ட் என்று பல்வேறு வகை ஐஸ்கிரீம்களைச் சுவைத்தாலும் அந்தப் பால் ஐஸுக்கு நிகர் எதுவும் இல்லை!

தேவையானவை :

பால் - 2 கப்

சேமியா - 1/8 கப்

சர்க்கரை - 1/4 கப்

ஏலக்காய் தூள் / வெண்ணிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி

செய்முறை : 

கடாயில் சேமியா எடுத்து பொன்னிற மாக வறுத்து, பால் ஊற்றி வேக விடவும். வெந்த பின் சர்க்கரை சேர்த்து கலந்து, நன்றாக கிளறவும். நன்கு கெட்டியாக வறும்போது அடுப்பை அணைக்க வும்.

சூடாறிய பிறகு அவற்றை அச்சுகளில் ஊற்றி 8 மணி நேரம் ஃப்ரிசரில் வைக்கவும். பின்னர் அவற்றை ஃப்ரிசரில் இருந்து எடுத்து, அவற்றின் மீது சிறிது தண்ணீர் விட்டு அச்சில் இருந்து எடுத்து பரிமாறவும். 
சேமியா பால் ஐஸ் ரெடி!

ஐஸ் சாப்பிட்ட  அன்றைய தினத்தின் இரவிலேயே சிலர் சளி மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகளால் அவதிப்படுவார்கள். 

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு சளி மற்றும் இருமல் நம்மைப் பாடாய்ப்படுத்தி விடும். அதிலும் குழந்தைகள் எனில், நிச்சயம் சளி பிடிப்பது உறுதி.ஐஸ்கிரீமை அனைவரும் விரும்பி சாப்பிட காரணமே அதன் சுவை தான். 

இதனுடைய சுவைக்காக ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் சர்க்கரை, பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. இதிலுள்ள கொழுப்பு பொருட்களின் விளைவாக, நம் உடலிலும் கொழுப்புகள் அதிகரித்து விடும் அபாயமும் உள்ளது. 

இதன் காரணமாக இரத்த நாளங்கள் சுருங்கி விடுவதோடு, சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, பல நோய்கள் நம்மைத் தாக்கி விடும். 
குறிப்பாக இரத்த அழுத்தம், மாரடைப்பு, தசைகளின் வலிமை குறைவு மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுத்து விடும் என்பதால் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது அல்ல என்பது தான் உண்மை.
Tags: