நெய் சாதம் செய்முறை / Ghee Rice Recipe !





நெய் சாதம் செய்முறை / Ghee Rice Recipe !

தேவையானவை : 

பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ, 

நெய் – 5 ஸ்பூன் 

ஏலக்காய் – 2 

முந்திரி – 10 கிராம் 

பாதாம் பருப்பு – 10 கிராம் 

திராட்சை – 10 கிராம் 

பட்டை – சிறிதளவு 

பிரிஞ்சு இலை – 1 

பல்லாரி – 1 

கேரட் – 1 

செய்முறை :

பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவவும். குக்கரில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வும். 

நெய் சாதம் செய்முறை

பின்னர் நெய்யில் பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் போடவும். இத்துடன் பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காய த்தை போட்டு வதக்கவும். 

இக்கலவை யுடன் அரிசியை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், தேவை யான உப்பு சேர்த்து கிளறவும். 

பின்னர் 3 கப் நீர் ஊற்றி குக்கரை மூடவும். 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரம் கழித்து திறக்கவும். 

ஏற்கனவே வாசனை தூக்கும். இப்ப முந்திரி, திராட்சை, பாதாம் போட்டா கேட்கவா வேணும். 

கூடுதலா கவே கும்மென்ற வாசனை யுடன் நெய் சாதம் தயார்.. குட்டீஸ் களுக்கு கொடுத்து பாருங்க… அப்புறம் பாருங்க…!
Tags: