ஃபிரைடு ஐஸ்கிரீம் செய்முறை | Fried Ice Cream Recipe !

ஃபிரைடு ஐஸ்கிரீம் செய்முறை | Fried Ice Cream Recipe !

தேவையானவை :

வெனிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப்,

ஸ்பான்ஞ் கேக் - 1/2 கப் அல்லது பிரெட் - 3 ஸ்லைஸ்,

மைதா - 1/2 கப்,

தண்ணீர் - தேவைக்கு,

பிரெட் கிரம்ஸ் அல்லது கார்ன்ஃபிளேக்ஸ் - 1/2 கப்,

சாக்லெட் சாஸ் - 3-4 டீஸ்பூன்,

பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :

2 ஸ்கூப் ஐஸ்கிரீம் களை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஃப்ரீசரில் 4 மணி நேரம் வைக்கவும். நன்கு இறுகியதும் 

ஃபிரைடு ஐஸ்கிரீம்

வெளியே எடுத்து ஸ்பான்ஞ் கேக்கில் புரட்டி மீண்டும் ஃப்ரீசரில் 2 மணி நேரம் வைக்கவும்.

அல்லது பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு சப்பாத்திக் கல்லில் வைத்து மெல்லிய தாக தேய்த்து, 

ஓரங்களில் பால் தடவி, அதன் நடுவே ஐஸ்கிரீம் களை வைத்து நன்கு மூடி, ஃப்ரீசரில் 2 மணி நேரம் வைக்கவும்.

மைதா, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். பிரெட் கிரம்ஸ் அல்லது கார்ன் ஃபிளேக்ஸை நொறுக்கி கொள்ளவும்.

கேக் அல்லது பிரெட் உருண்டை களை மைதாவில் முக்கி, பிரெட் கிரம்ஸில் புரட்டி ஃப்ரீசரில் வைத்து, தேவையான பொழுது எடுத்து பயன் படுத்தவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் காய வைத்து, ஐஸ்கிரீம் உருண்டை களாக 2-3 நிமிடத்திற்குள் 

பொன்னிற மாக பொரித்தெடுத்து சாக்லெட் சாஸுடன் அலங்கரித்து பரிமாறி, உடனே சாப்பிடவும்.

குறிப்பு:

சாக்லெட்டை டபுள் பாயிலிங் அல்லது மைக்ரோவேவ் அவனில் வைத்து உருக்கவும். 

தேவை யானால் வெண்ெணய் சேர்த்து உருக்கவும். சாக்லெட் சாஸ் ரெடி.
Tags: