சில்லி சப்பாத்தி செய்முறை / Chili Chapati Recipe !

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி – 2,

வெங்காயம் – 1,

பச்சை மிளகாய் – 1,

சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்,

சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்,

தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்,

சிவப்பு ஃபுட் கலர் – 1 துளி,

கொத்த மல்லித் தழை- கால் கட்டு,

உப்பு – தேவைக் கேற்ப,

எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

சில்லி சப்பாத்தி

ஒரு பாத்திரத் தில் சப்பாத்தியை சின்னத் துண்டு களாகப் பிய்த்து போட்டு வைக்கவும்.

வெங்காயம், கொத் தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.

அடுத்து ஃபுட் கலரில் சிறிது தண்ணீர் கலந்து, அதையும் சேர்க்கவும்.

பிறகு அதில் சப்பாத்தி துண்டு களைப் போட்டுக் கிளறி, கொத்த மல்லி தூவி இறக்கவும்.

சூப்பரான மாலை டிபன் சில்லி சப்பாத்தி ரெடி.
Tags:

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !