சுவையான பொடி மீன் வறுவல் செய்வது எப்படி?





சுவையான பொடி மீன் வறுவல் செய்வது எப்படி?

மீன்கள் என்றாலே நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் மூலக்கூறுகள் அதிகம் உள்ள மீன்களில் நெத்திலி மீன்களும் ஒன்று.
பொடி மீன் வறுவல்

மற்ற எல்லா மீன்களையும்விட, இந்த நெத்திலி மீனின் உடல் மிக மெல்லியதாக காணப்படும். இந்த மீனின் மேல் பகுதியில் பச்சைக்கோடும், கீழ்பகுதியில் ரத்த சிவப்புக்கோடும் இருக்கும். 

நெத்திலி மீன்கள் மருத்துவக் குணங்கள் அதிகமுள்ளவை. பெரிய மீன்களை காட்டிலும், நெத்திலி போன்ற சிறிய மீன்கள் இதயத்துக்கு நல்லது என்பார்கள். 

அத்துடன், தைராய்டு சுரப்பி, நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு என பல்வேறு வகைகளில் இந்த நெத்திலி பயன்படுகிறது. காரணம், செலினியம் இந்த மீனில் அதிகம் நிறைந்துள்ளது.
கேரளாவில் நெத்திலி மீன் மிகவும் பிரபலமானது மிகவும் குளிராக இருக்கும் நீர்ப்பகுதிகளில் இந்த மீன் இருப்பதில்லை. 

நெத்திலி எண்ணெய் நிறைந்த மீன் வகையாக இருப்பதால் இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதயத்திற்கு ஆரோக்கியமானது.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுவது. புரதம் அதிகம் இருப்பதால் சத்தான உணவாக கருதப்படுகிறது. 

கலோரிகளும் குறைவு, புரோட்டீன்களும் அதிகம் என்பதால், உடல் எடையை குறைக்க நெத்திலி மீன்கள் உதவுகின்றன.என்ன தான் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டாலும் அதை வறுவல் செய்து சாப்பிடுவது தனிச்சுவை தான். 

பெரும்பாலும் மீன் குழம்பு, மீன் பொரியல் மட்டுமே சாப்பிட்டு நிறைய பேருக்கு அலுத்துப் போயிருக்கும். 

மீனை வைத்து வேறு என்ன வெரைட்டியாக செய்யலாம் என்று யோசிப்ப வர்ளுக்காகவே இந்த சுவையான பொடி மீன் வறுவல் ரெசிபி.வாங்க பொடி மீன் வறுவல் எப்படி செய்யலானு தெரிஞ்சுக்கலாம்.

தேவையான பொருட்கள் 

நெத்திலி மீன் – அரை கிலோ 

மிளகாய் தூள் – 25 கிராம் 

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் 

மிளகு தூள் – ஒரு டீஸ்பூன் 

சீரக தூள் – ஒரு டீஸ்பூன் 

உப்பு – தேவைகேற்ப 

ஓமம் – கால் டீஸ்பூன் 

கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 

பூண்டு – ஐந்து பல் (நசுக்கியது) 

தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன் 

சோல மாவு – 25 கிராம் 

அரிசி மாவு – 25 கிராம் 

முட்டை வெள்ளை கரு – அரை முட்டை 
உங்கள் உடலில் விஷம் பரவி விட்டதா?
செய்முறை 

ஒரு கிண்ணத்தில் நெத்திலி மீன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கறிவேப்பிலை, பூண்டு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

பிறகு, அதில் சோல மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின், குளிர் சாதன பெட்டியில் வைத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உதிரி உதிரியாக போட்டு பொன்னிற மாக வறுத்து எடுத்தால் சுவையான பொடி மீன் வறுவல் ரெடி.
Tags: