அருமையான உடனடி கிரேவி செய்வது எப்படி?





அருமையான உடனடி கிரேவி செய்வது எப்படி?

பச்சை பட்டாணி பெரும்பாலும் உலர வைக்கப்பட்டு பின்னர் விற்பனைக்கு வருகின்றன. காய்ந்த பட்டாணி ஆண்டு முழுவதிலும் விற்பனைக்கு கிடைக்கும். 
உடனடி கிரேவி
அதே சமயம், உலர வைக்காமல் பச்சை பட்டாணி காயாகவே சில சமயம் விற்பனைக்கு வரும். பெரும்பாலும் குளிர்காலங்களில் பச்சை பட்டாணி காய்கள் விற்பனைக்கு வருகின்றன.

உலர்ந்த பட்டாணியை ஊற வைத்து நம் சமையலில் சேர்த்து கொள்ளலாம் அல்லது காய்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பச்சை பட்டாணியை நேரடியாக சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். 
வெஜ் பிரியாணி, வெஜ் குருமா, உருளைக்கிழங்கு மசால் போன்ற பல்வேறு உணவுகளில் பச்சை பட்டாணி முக்கிய இடத்தை பெறுகிறது.

பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவை இதில் நிறைந்துள்ளன. 

ஊட்டச்சத்து மிகுந்த பச்சை பட்டாணியை குளிர் காலத்தில் சாப்பிடுவதன் மூலமாக இன்னும் சிறப்பான பலன்களை பெற முடியும்.

பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. 
இது மட்டுமல்லாமல் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவை இதில் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து மிகுந்த பச்சை பட்டாணியை குளிர் காலத்தில் சாப்பிடுவதன் மூலமாக இன்னும் சிறப்பான பலன்களை பெற முடியும்.
தேவையானவை ;

கேரட் - 2

பச்சைப் பட்டாணி - 4 டேபிள் ஸ்பூன்

வெங்காயம், தக்காளி – ஒன்று

பூண்டு - 3 பல்

மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

அரைக்க :

சோம்பு - அரை டீஸ்பூன்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் - ஒன்று

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை  :
அடிகனமான வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு பூண்டு, தக்காளி இரண்டையும் சேர்த்து வதக்கி, கேரட்டைப் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு கப் தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு, பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்ந்து மூடி வைத்து வேக வையுங்கள்.
காய்கள் வெந்ததும் அரைக்கக் கொடுத்த வற்றை அரைத்துச் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்ட டிபன் வகைகளுடன் சாப்பிட ஏற்றது.
Tags: