இஞ்சி குழம்பு செய்முறை / Ginger Curry Recipe !





இஞ்சி குழம்பு செய்முறை / Ginger Curry Recipe !

இஞ்சி குழம்பை இட்லி, தோசை, சாதம் என பல வகை உணவு களுடன் பரிமாறலாம்.

இஞ்சி குழம்பு

வயது வரம்பு இல்லாமல் இதை எல்லோரும் சாப்பிட லாம். 

குறைந்த நேரத்தில் அசத்த்லான சுவையில் இந்த குழம்பை தயார் செய்து விடலாம். 

தேவையான பொருட்கள் 

இஞ்சி – 50 கிராம் 

பூண்டு – 50 கிராம் 

வெங்காயம் – 1 

தக்காளி – 1 

பச்சை மிளகாய் – 2 

புளி – சிறிதளவு 

மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி 

மிளகு – 1 தேக்கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை – தாளிக்க 

நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி 

நெய் – 1 தேக்கரண்டி 

செய்முறை 

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்து ள்ளதை போட்டு

தாளித்து பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். 

* அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும். 

* இப்பொழுது தோல் சீவி அரைத்து வைத்தி ருக்கும் இஞ்சி மற்றும் மிளகு கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 

* பின்னர் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். 

 * புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அதை வதக்கிய வற்றுடன் சேர்த்து கொதிக்க விடவும். 

* ஒரு கொதி வந்ததும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். 

* மிளகாய் தூள் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கி உணவுடன் பரிமாற லாம்.
Tags: