நூல்கோல் பொரியல் செய்முறை / Threaded frying recipe !





நூல்கோல் பொரியல் செய்முறை / Threaded frying recipe !

தேவையானப் பொருள்கள்: 

பச்சைப் பயறு -  1/4 கைப்பிடி 

கடலைப் பருப்பு - 1/2 கைப்பிடி 

நூல்கோல் - 1 சிறியது (நூக்கல் என்றும் சொல் வார்கள்) 

சின்ன வெங்காயம் - 2 

பச்சை மிளகாய் -  1 (விருப்ப மானால்) 

மிளகாய்த் தூள் -  1/2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - சிறிது 

தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன் (விருப்ப மானால்) 

கொத்து மல்லி இலை - ஒரு கொத்து 
உப்பு - தேவைக்கு 

தாளிக்க: 

நல்லெண்ணெய் 

கடுகு

உளுந்து 

சீரகம் 

பெருங்காயம் 

கறிவேப்பிலை

செய்முறை: 

நூல்கோல் பொரியல்

பருப்புகளை நன்றாகக் கழுவி விட்டு, ஒரு வாணலி யில் போட்டு அது வேகும் அளவை விட சிறிது கூடுதலாக தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும்.

சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து மூடி வேக வைக்கவும். 

வெங்காயம், பச்சை மிளகாய், நூல்கோல் இவற்றை விருப்ப மான வடிவத்தில் நறுக்கி வைக்கவும். 

பருப்பு பாதி வெந்த பிறகு நறுக்கி வைத்துள்ள வற்றை அதனுடன் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து வேக வைக்கவும். 

காய் வெந்து கொண்டி ருக்கும் போதே மிளகாய்த் தூளை சேர்த்துக் கிளறி விடவும். காய் வெந்து, நீர் வற்றியதும் 

தேங்காய்ப் பூ, கொத்து மல்லி இலை சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும். 
இப்போது ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்துப் பொரியலில் கொட்டிக் கிளறவும். 

இப்போது நூல்கோல் பொரியல் தயார். 

குறிப்பு: 

இந்தக் காய்களில் தான் செய்ய வேன்டு மென்ப தில்லை.இதனை விருப்ப மான எல்லாக் காய்களி லும் செய்யலாம்.
Tags: