டேஸ்டியான பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?





டேஸ்டியான பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?

வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.  பீன்ஸ் சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். 
டேஸ்டியான பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?
சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ். இந்த நோயால் அதிகம் மக்கள் அவதியுறுகிறார்கள் இதற்கு தீர்வாக பல சிகிச்சைகள் முன் வைக்கப் பட்டாலும் பிரச்சனை என்னவோ அப்படியே தான் இருக்கிறது.

பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். 

நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும். சரி இனி பீன்ஸ் பயன்படுத்தி டேஸ்டியான பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
தேவையானவை:

பீன்ஸ் - ஒரு கிண்ணம்

பச்சைப் பருப்பு - ஒரு கைப்பிடி

வெந்த துவரம் பருப்பு - 1/2 கைப்பிடி

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்

கடுகு

உளுந்து
சீரகம்

கடலைப் பருப்பு

பெருங்காயம்

கறிவேப்பிலை

செய்முறை:
டேஸ்டியான பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி?
பச்சைப் பருப்பை வெறும் வாணலில் போட்டு விவக்க வறுத்து, ஆறியதும் கழுவி விட்டு, ஒரு கடாயில் எடுத்துக் கொண்டு, அது வேகும் அளவை விட சிறிது கூடுதலாகத் தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.

பீன்ஸை விருப்ப மான அளவில் நறுக்கவும். பருப்பு பாதி வெந்த நிலையில் நறுக்கி வைத்துள்ள பீன்ஸை அதனுடன் சேர்த்து,தேவை யான உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.

காய் வெந்து கொண்டிருக்கும் போதே மிளகாய்த் தூளை சேர்த்துக் கிளறி விடவும் காய் வெந்து, நீர் வற்றியதும் வெந்த துவரம் பருப்பு சேர்த்துக் கிளறவும்.

ஒரு கரண்டி யில் எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டி யதைத் தாளித்து பொரியலில் கொட்டிக் கிளறி இறக்கவும். விருப்ப மானால் இறக்கும் போது தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கலாம்.

இப்போது சுவையான பீன்ஸ் பொரியல் தயார்.
Tags: