சுவையான கேரளத்து ஆப்பம் செய்வது எப்படி?





சுவையான கேரளத்து ஆப்பம் செய்வது எப்படி?

தினமும், அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக கூறப்படுவது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். 
சுவையான கேரளத்து ஆப்பம் செய்வது எப்படி?
இன்று குக்கரில் வேகவைத்து அதாவது கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது. 

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும் போது சிறிது உப்பைப் போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம், ஆகியவை சரியாகும். ஆனால், கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும். கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது. சாதத்தை மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

பச்சரிசி சாப்பிட்டால் உடல் சதைப் பிடிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். எனவே, உடல் மெலிந்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். 

உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் 

பச்சரிசி – 2 கப் 

தேங்காய் -1 /2 கப் (துருவியது) 

இளநீர் – 2 

உப்பு – தேவை யான அளவு 

செய்முறை . :
சுவையான கேரளத்து ஆப்பம் செய்வது எப்படி?
முதலில் அரிசியை 1 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி, கிரைண்டரில் போட்டு, தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதனை ஒரு பாத்திர த்தில் போட்டு, உப்பு சேர்த்து, ஆப்ப மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி, ஒரு துணியால் அந்த வாணலியை தேய்க்கவும். 

பின் ஒரு கரண்டி ஆப்ப மாவை ஊற்றி, ஒரு முறை வட்டமாக ஆப்பம் வருவது போல் சுற்றி, பின்பு ஒரு தட்டை வைத்து 2-3 நிமிடம் மூடவும். முறுகலாக வரும் போது அதனை எடுத்து பரிமாறவும். 

இப்போது சுவையான கேரள ஸ்டைஸ் அப்பம் ரெடி. 

இதனை தேங்காய் பாலுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Tags: