கொத்து மல்லி சாதம் செய்முறை / Coriander rice recipe !





கொத்து மல்லி சாதம் செய்முறை / Coriander rice recipe !

தேவையானப் பொருட்கள்: 

அரிசி - 1 கப் 

பச்சை கொத்து மல்லி - 1 

கட்டு பச்சை மிளகாய் - 2 

இஞ்சி - ஒரு சிறு துண்டு 

புளி - ஒரு சிறு நெல்லிக் காயளவு 

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 

முந்திரிப் பருப்பு - சிறிது 
எண்ணை - 1 டேபிள் ஸ்பூன் 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

உப்பு - 1 டீஸ்பூன் 

அல்லது தேவைக் கேற்றவாறு 

செய்முறை: 

அரிசியைக் கழுவி தேவை யான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக் கவும். 

கொத்து மல்லி சாதம்

ஒரு வாணலி யில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். 

பருப்பு சிவந்த வுடன் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். 

இஞ்சியை யும் துண்டு களாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின் அதில் புளியைப் போட்டு சற்று வதக்கவும். 

கடைசியில் கொத்து மல்லியை நறுக்கிப் போட்டு சில வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும். 
ஆறிய வுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத் தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவை யில்லை. 

வாணலி யில் மீதி எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். 

கடுகு வெடிக்க ஆரம்பி த்ததும், முந்திரிப் பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். 

அத்துடன் சாதம், உப்பு, கொத்து மல்லி விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும். 

தயிர் பச்சடி யுடன் சாப்பிட சுவை யாக இருக்கும்.
Tags: