காலிஃபிளவர் மசாலா செய்முறை / Cauliflower Spice Recipe !





காலிஃபிளவர் மசாலா செய்முறை / Cauliflower Spice Recipe !

தேவையான பொருட்கள்: 

காலிஃபிளவர் - 1 

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி - ஒரு சிறு துண்டு

பூண்டுப் பற்கள் - 4 அல்லது 5 

கசகசா - 1 டீஸ்பூன் 

முந்திரிப் பருப்பு - 20 

சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் 

சீரகத் தூள் - 1 டீஸ்பூன் 

கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

தயிர் - 1/2 கப் 

உப்பு - 1 டீஸ்பூன் 

எண்ணை - 4 டேபிள் ஸ்பூன் 

கொத்து மல்லித் தழை - சிறிது 

செய்முறை: 

காலிஃபிளவர் மசாலா

காலிஃபிளவரை தண்டு நீக்கி விட்டு, சிறு துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். 

வெட்டியத் துண்டுகளை ஒரு பாத்திரத் தில் போட்டு, அதில் தயிர், சீரகத் தூள், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள் 

மற்றும் உப்பு சேர்த்துப் பிசறி விட்டு சற்று நேரம் ஊற விடவும். 

வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகிய வற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

முந்திரிப் பருப்பு, கசகசா இரண்டை யையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத் தெடுக்கவும். 

ஒரு வாணலி யில் எண்ணை விட்டு சூடானதும் அதில் வெங்காய த்தைப் போட்டு வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கி யவுடன் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். 

பின்னர் தக்காளித் துண்டு களைச் சேர்த்து வதக்கவும். 

தக்காளி நன்றாக வதங்கி யதும் அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி விடவும். 

 பின்னர் அத்துடன் ஊற வைத்துள்ள காலிஃபிளவர் துண்டு களைப் போட்டுக் கிளறி மூடி வைத்து, மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வேக விடவும். 

பின்னர் அதில் முந்திரி விழுதைப் போட்டுக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்தி ருந்து, இறக்கி வைக்கவும். 

கொத்து மல்லித் தழையைத் தூவி பரிமாறவும். சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட சுவையா யிருக்கும்.
Tags: