காலி ஃபிளவர் பொரியல் செய்முறை / Cauliflower furry recipe !





காலி ஃபிளவர் பொரியல் செய்முறை / Cauliflower furry recipe !

தேவையானப் பொருள்கள்: 

காலி ஃபிளவர் - ஒரு சிறிய இளம் பூ 

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன் 

உப்பு - தேவைக்கு 
தாளிக்க: 

எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 

கடுகு உளுந்து சீரகம் கடலைப் பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை - தேவைக்கு

காலி ஃபிளவர் பொரியல்

செய்முறை: 

முதலில் காலிஃபிளவர் பூவை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கொதிக்கும் நீரில் போட்டு, 

அதனுடன் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் நீரை வடித்து விட்டு பொடியாக நறுக்கி வைக்கவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தளிக்கக் கொடுத் துள்ளப் பொருள் களை 
ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து விட்டு நறுக்கிய காலிஃபிளவர் சேர்த்து வதக்கவும். 

பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வைக்கவும். 

பூவில் உள்ள நீர் வற்றி எல்லாம் ஒன்றாகக் கலந்த பிறகு தேங்காய்ப் பூ, கொத்து மல்லித் தூவி இறக்கவும். 

குறிப்பு: விருப்ப மானால் அரை கைப்பிடி பாதி வெந்து பிழிந்த துவரம் பருப்பை தேங்காய்ப் பூ சேர்ப்பதற்கு முன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Tags: