ப்ரோக்கலி கூட்டு செய்முறை / Broccoli Kootu Recipe !





ப்ரோக்கலி கூட்டு செய்முறை / Broccoli Kootu Recipe !

தேவையானவை:

ப்ரோக்கலி பூ - ஒன்று

பச்சைப் பயறு - 1/2 கைப்பிடி

சின்ன வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 1

தக்காளி - 1/4 பகுதி

அரைக்க:


தேங்காய் பத்தை  - 2

சீரகம் - சிறிது

அரிசிமாவு - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்

கடுகு

உளுந்து

காய்ந்த மிளகாய்

பெருங்காயம்

கறிவேப்பிலை 

செய்முறை:

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி சுத்தம் செய்து கொள்ள‌வும்.

ப்ரோக்கலி கூட்டு

தண்டு, இலைக ளையும் தூக்கிப் போடாமல் சிறு துண்டு களாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

பச்சைப் பயறை சூடுவர வறுத்து, கழுவி விட்டு அது வேகுமளவு தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள், பெருங்காயம், இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.

பாதி வேகும் போதே வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து கிளறி விட்டு வேக விடவும்.

இவை எல்லாம் வெந்ததும் ப்ரோக்கலி யைச் சேர்த்துக் கிளறி விட்டு,சிறிது உப்பும் சேர்த்து கிண்டிவிடவும். ப்ரோக்கலி சீக்கிரமே வெந்து விடும்.

இரண்டு கொதி வந்தாலே போதும்.

தேங்காய், அரிசி மாவு, சீரகம் இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து கொதிக்கும் கூட்டில் ஊற்றி மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவை களைத் தாளித்து ப்ரோக்கலி கூட்டில் கொட்டிக் கிளறவும்.

இது சாதம், சப்பாத்தி இவற்றிற்கு பொருத்த மாக இருக்கும்.
Tags: