கேழ்வரகு இனிப்பு அடை செய்முறை / Ragi Sweet Adai Recipe !





கேழ்வரகு இனிப்பு அடை செய்முறை / Ragi Sweet Adai Recipe !

இந்த அடைக்கு கொழுக் கட்டை,கேழ்வரகு புட்டு செய்யும் போது மீதமாகும் பூரணத்தைப் பயன் படுத்தலாம். 

கேழ்வரகு இனிப்பு அடை
அல்லது கீழ்க்காணும் முறைப்படி வேர்க் கடலைக் கலவையைத் தயார் செய்தும் செய்யலாம்.

தேவையானப் பொருள்கள்:

கேழ்வரகு மாவு - ஒரு கப்

வேர்க்கடலை - 2 டீஸ்பூன்

எள் - 1/2 டீஸ்பூன்

வெல்லம் - 2 டீஸ்பூன் (பொடித்தது)

ஏலக்காய் - 1 (விருப்ப மானால்)

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலி யில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, வறுத்த எள், ஏலக்காய் இவற்றை மிக்ஸி யில் போட்டு 

 pulse ல் இரண்டு சுற்று சுற்றி இறுதியில் பொடித்த வெல்ல த்தைப் போட்டு கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத் தில் மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு துளிக்கும் குறைவாக உப்பு (சுவைக் காக), பொடித்து வைத்துள்ள 

வேர்க் கடலைக் கலவையை சேர்த்துக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தி ற்குப் பிசைந்துகொள்ளவும்.

ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.அது சூடேறு வதற்குள் பிசைந்து வைத்த மாவில் இருந்து 

ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணி யின் மேல் வைத்து அடை போல் தட்டவும். 
கல் காய்ந் ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை கல்லில் போட்டு சுற்றிலும், 

அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிதமானத் தீயில் மூடி போட்டு வேக விடவும். 

மாவில் வெல்லம் சேர்த்தி ருப்பதால் தீ அதிகமாக இருந்தால் அடை தீய்ந்து விடும்.

அடையின் ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும். இதற்கு தொட்டு சாப்பிட எதுவும் தேவை யில்லை.

அப்படியே சாப்பிட வேண்டியது தான்.
Tags: