சுவையான கார துக்கடா செய்வது எப்படி?





சுவையான கார துக்கடா செய்வது எப்படி?

மிளகாய்த்தூள் உடலில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது. இது கணிசமான அளவு நார்ச்சத்துகளை கொண்டுள்ளது. 
சுவையான கார துக்கடா செய்வது எப்படி?
இதிலிருக்கும் ஃபைபர் பெரிஸ்டால்டிக் இயக்கத்தையும், இரைப்பை சாறுகளின் சுரப்பையும் தூண்டுகிறது. செரிமானத்தை எளிதாக்குவதால் மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்க செய்கிறது.
 
நம் பாரம்பரிய உணவு உலகம் முழுக்க பிரபலமாக காரணமே நமது மசாலா பொருள்கள் தான். மிளகாய்த்தூள் கார மணத்தை மட்டும் அளிப்பவை அல்ல. 
 
அவை சத்துக்களையும் கொண்டுள்ளது. மிளகாய் மற்றும் மிளகாய்த் தூளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை.
 
கார துக்கடா இப்படி செய்து பாருங்கள் மொறு மொறுன்னு சுவையாக இருக்கும் காலியாகி விடும்
தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !
தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

வெண்ணை அல்லது நெய் - 2 டீஸ்பூன்

எண்ணை - பொரிப்பதற்கு தேவை யான அளவு
நண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் !
செய்முறை:
சுவையான கார துக்கடா செய்வது எப்படி?
மைதா, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், வெண்ணை, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். 

அதில் தண்ணீரை விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும். 
 
ஒரு எலுமிச்சம்பழ அளவு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இடவும். கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு,
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும். எல்லா மாவையில் இப்படியே செய்து, வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.

ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணையில் விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், செய்து வைத்திருக்கும் துக்கடாவை கொஞ்சம் கொஞ்ச மாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
Tags: