பொட்டுக்கடலை ஓமப்பொடி செய்வது எப்படி?

0
மாலை நேரங்களில் பெரும்பாலான பேக்கரிகளில் ஓம்ப்பொடி செய்வதை நாம் காணலாம். என்ன தான் மற்ற மாலை நேர சிற்றுண்டிகளை மக்கள் சுவைத்தாலும் ஓமப்பொடிக்கு என்று ஒரு கூட்டம் இருக்கத் தான் செய்கிறது.
பொட்டுக்கடலை ஓமப்பொடி செய்வது எப்படி?
ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம். 
வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஓமத் திரவம் நல்ல ஜீரண சக்தியை தரும்.

ஜீரணத்திற்கு மட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் திரவம் அருமருந்து. மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது. 

பெண்களுக்கு மாதவிடாய்  காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம். 

சரி இனி பொட்டுக்கடலை வைத்து பொட்டுக்கடலை ஓமப்பொடி எப்படி செய்வது? என்று  இன்றைய சமையலில் பார்ப்போம்.

FASTag எப்படி வாங்குவது? எவ்வளவு கட்டணம்?

தேவையானவை : .
 
பொட்டுக்கடலை மாவு – ஒரு கப்,
 
கடலை மாவு – ஒரு கப்,
 
அரிசி மாவு – ஒரு கப்,
 
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
 
ஓமம் – 2 டீஸ்பூன்,
 
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
 
செய்முறை : .
 பொட்டுக்கடலை ஓமப்பொடி செய்வது எப்படி?
முதலில் ஒரு மேஜைக்கரண்டி அளவு ஓமத்தை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை ஒரு முறை நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து கொள்ளவும். (ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

அடுத்து அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

ஆக்சிஜன், தொழிற்சாலைகளில் எப்படி தயாரிக்கப்படுகிறது? - ஆக்சிஜன் தட்டுப்பாடு !

இந்த தண்ணீருடன் பொட்டுக் கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசைந்து வைத்து கொள்ளவும்.

பின்னர் இடியாப்ப அச்சை எடுத்து அதன் உள் புறங்களில் நன்கு எண்ணெய்யை தடவி பின்பு நாம் செய்து வைத்திருக்கும் மாவை அதில் வைத்து மூடி அதை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த ஓமப்பொடியை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்ட பின் கடாயின் மேலே இடியாப்ப அச்சை வைத்து மாவை பக்குவமாக எண்ணெய்யில் பிழிந்து விடவும். 

(மாவை எண்ணெய்யில் பிழிந்து விடும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம், மாவை நன்கு எண்ணெய் மேலே தூக்கி வைத்து பிழியவும்.)
அது ஒரு புறம் நன்கு பொரிந்ததும் அதை மறு புறம் திருப்பி போட்டு வேக விட்டு அது நன்கு வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஒரு தட்டில் டிஷ்யூ பேப்பரை விரித்து அதில் வைத்து எண்ணெய்யை வடிய விடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)