பனீர் சீஸ் பன் செய்முறை / Paneer cheese buns !





பனீர் சீஸ் பன் செய்முறை / Paneer cheese buns !

தேவையானவை:

நல்ல தரமான பன் – 6, 

சீஸ் துருவல், பனீர் துருவல் – தலா அரை கப், 

கேரட் துருவல், கோஸ் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், 
பச்சை மிளகாய் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), 

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு, 

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், 

மிளகுத்தூள், உப்பு – சிறிதளவு.

செய்முறை:

பனீர்  சீஸ் பன் செய்முறை
பன்னை படுக்கை வாக்கில் 2 துண்டாக வெட்டவும். அதன் கீழ்ப் பகுதியில்

உள்ள பாகத்தை கத்தியால் கீறி ஒரு சின்ன பள்ளத்தை ஏற்படுத்தவும். 

பனீர், சீஸ் துருவலுடன் பச்சை மிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல்,

கொத்த மல்லித் தழை, மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். 

பன்னின் (கீழ்ப்பகுதி) பள்ளத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் துருவல் கலவையை அழுத்தி வைத்து மேல்பாக பன்னால் மூடவும். 

தவாவை சூடேற்றி ஸ்டஃப் செய்த பன்னை அதன்மேல் வைத்து, சுற்றிலும் வெண்ணெய் தடவி, வெந்ததும் 
மறுபுறம் திருப்பிப் போட்டு, நன்கு சூடானதும் எடுத்து சாப்பிடக் கொடுக்கவும்.

லேசாக வறுத்த எள்ளை மேலே தூவியும் பரிமாறலாம்.
Tags: