அருமையான இறால் ஃப்ரை செய்வது எப்படி?





அருமையான இறால் ஃப்ரை செய்வது எப்படி?

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
இறால் ஃப்ரை
கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 

இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 
இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. 

பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில். 

இதோ...  வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான இறால் ஃப்ரை
தேவையானவை:

இறால் (சுத்தம் செய்தது) - 200 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

வட்டமாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10 கிராம்

நறுக்கிய காய்ந்த மிளகாய் - ஒரு டீஸ்பூன்

கொத்த மல்லித் தழை - சிறிதளவு

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
வெயில் கால தலைவலிக்கு காரணங்கள் !
செய்முறை:
ஒரு வாணலியில் இறால், இஞ்சி- பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அந்த வாணலியை அடுப்பில் வைத்து 3-5 நிமிடங்கள் வரை வேக விடவும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு சேர்த்து வெடித்த வுடன் அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

அதனுடன் மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து வதக்கி பச்சை வாசனை நீங்கிய வுடன் வேக வைத்துள்ள இறால் கலவையைச் சேர்க்கவும்.

தண்ணீர் முழுமையாக வற்றும் வரை கொதிக்க விட்டு, பின்னர் எலுமிச்சை சாறு, தேவைப் பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கலந்து டிரை ஆக வறுத்து, கொத்து மல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்

இறால் ஃப்ரையை, சைடு டிஷ் மற்றும் ஸ்நாக்ஸாகச் சாப்பிடலாம்.
விண்வெளி பயணம் உயிருக்கு ஆபத்தானதா?
குறிப்பு:

இறாலை அதிக நேரம் வேக வைத்தால், அவை மிருதுவானத் தன்மையை இழப்பதுடன் சுவையும் குறையும்.

எனவே, இறால் ஃப்ரை செய்யும் போது மறக்காமல் இறால் அதிக நேரம் வேகாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
Tags: