அருமையான சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி?





அருமையான சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி?

அசைவ உணவு வகைகளில் ஒன்றான சிக்கன் வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் ஒரு கூட்டமே அடிமையாக இருக்கும்.  
சிக்கன் லாலிபாப் செய்முறை
சில்லி சிக்கன், சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் கிரேவி,சிக்கன் தந்தூரி என்று எதை செய்து கொடுத்தாலும் அடுத்த நிமிடமே காலி ஆகி விடும். அந்த வகையில் சிக்கன் ரெசிபிகளில் ஒன்றான சிக்கன் லாலிபாப் ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம். 

இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும் குறிப்பாக குழந்தைகள் மிகவும் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு உணவு என்றும் கூறலாம். 

வழக்கமாக நம்மில் அதிகமானோர் இந்த சிக்கன் லாலி பாப்பை துரித உணவகங்கள் அல்லது ரெஸ்டாரண்ட்களில் சென்று தான் சுவைத்து சாப்பிட்டு இருப்போம். 

ஆனால் இன்று அதனை நமது வீட்டிலேயே சுவையாகவும் எளிமையாகவும் செய்யலாம். இதனை ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் என பல வகையான உணவுகளுக்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். 

சிலர் இதனை மட்டுமே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவார்கள். வாருங்கள்! வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில். 

இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, மொறுமொறுவான சிக்கன் லாலி பாப்பை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை:

சிக்கன் லாலிபாப் துண்டுகள் - 8

முட்டை - ஒன்று

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

தயிர் - 50 மில்லி

கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

ஃபுட் கலர் (சிவப்பு) - ஒரு சிட்டிகை (விரும்பினால்)

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு
கொசு விரட்டி மற்றும் ரூம் ஸ்பிரே அலர்ஜி
செய்முறை:

சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம்செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத் தில் முட்டை, இஞ்சி- பூண்டு விழுது, மிளகுத் தூள்,
மிளகாய்த் தூள், எலுமிச்சை சாறு, தயிர், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்திரு க்கும் சிக்கன் லாலிபாப் துண்டு களைச் சேர்த்துப் பிரட்டி எடுத்து, மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்கு மாறு செய்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை அதில் பொரிக்கவும்.

பொரித் தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டு களை ஒரு டிஸ்யூ தாளில் எடுத்து வைத்து, மிகையான எண்ணெய் உறிஞ்சப் பட்டதும் சூடாகப் பரிமாறவும்.
அப்பன்டிசைடிஸ் என்பது கல் அடைப்பது அல்ல !
குறிப்பு:

சிக்கன் லாலிபாப் துண்டுகளுடன் மெல்லியதாகவும் நீளமாகவும் நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்தும் பரிமாறலாம்.
Tags: