கம்பு, பச்சைப் பயறு புட்டு செய்முறை / Rye, green lentils, pudding Recipe !





கம்பு, பச்சைப் பயறு புட்டு செய்முறை / Rye, green lentils, pudding Recipe !

தினமும் காலையில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது புத்துணர் ச்சியை தரும். 

கம்பு, பச்சைப் பயறு புட்டு
மருத்துவ குணங்கள்: 

உடல் சூட்டை தனிக்கும், உடல் வலுக் கூடும், அஜீரணக் கோளாறு சீராகும், வயிற்றுப் புண் உள்ளிட்டவை குணமாகும்.

தேவையான பொருட்கள் :

கம்பு மாவு - ஒரு கப்,

முளை விட்ட பச்சைப் பயறு,

துருவிய வெல்லம்,

தேங்காய்த் துருவல் - தலா அரை கப்,

நெய் - ஒரு தேக்கரண்டி.

செய்முறை :

வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆற விடவும்.

ஒரு பாத்திரத்தில் அந்த மாவை போட்டு அதில் வெதுவெதுப் பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறவும்.

புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப் பயறு, வெல்லம், தேங்காய்த் துருவல் என்ற துறையில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான கம்பு - பச்சைப் பயறு புட்டு தயார்.
Tags: