தேவையானவை:

அவல் – ஒரு கப், 

வேர்க் கடலை – அரை கப், 

பொட்டுக் கடலை – அரை கப்,

ஓட்ஸ் – அரை கப், 

உருளைக் கிழங்கு – 2, 

சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், 

எலுமிச்சம் பழம் – அரை மூடி, 

ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மிக்ஸ்டு சாட்

அவல், வேர்க் கடலை, பொட்டுக் கடலை, ஓட்ஸ் ஆகிய வற்றை வெறும் வாணலி யில் வறுக்கவும்.

உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, உதிர்க்கவும். 

இவை எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து, மேலே சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, ஸ்வீட் சட்னி, க்ரீன் சட்னி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.