தேவையானவை: 

உருளைக் கிழங்கு – 2, 

வெள்ளரிக் காய், கேரட், ஸ்வீட் கார்ன், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, 

கொத்த மல்லி, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – சிறிதளவு, 

சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெஜ் சாட்

உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்க்கவும். வெள்ளரிக் காய், கேரட்டை துருவவும்.

ஸ்வீட் கார்னை வேக வைத்து உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

காய்கறி களை ஒன்றாக கலந்து… கொத்த மல்லி, ஓமப்பொடி, சாட் மசாலா பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துப் பரிமாற வும்.