பிங்க் பூரி செய்முறை / Pink Puri !





பிங்க் பூரி செய்முறை / Pink Puri !

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப், 

காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப), 

கரம் மசாலாத் தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், 

எண்ணெய், உப்பு, பீட்ரூட் வேக வைத்த நீர் – தேவையான அளவு.

செய்முறை:

பிங்க் பூரி

காய்ந்த மிளகாய், சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை கோதுமை மாவுடன் கலந்து உப்பு, கரம் மசாலாத் தூள் சேர்த்து, பீட்ரூட் வேக வைத்த நீர் தெளித்து நன்கு பிசையவும். 

இந்த மாவை சிறு பூரிகளாகத் தேய்த்து, சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும். இதற்குத் தொட்டுக் கொள்ள வெள்ளரி ராய்தா பெஸ்ட் சாய்ஸ்.
Tags: