அவகேடோ உருளை மிக்ஸ்டு சாலட் செய்முறை / Avocados roller Mixed Salad !





அவகேடோ உருளை மிக்ஸ்டு சாலட் செய்முறை / Avocados roller Mixed Salad !

தேவையானவை:

அவகேடோ பழம் – 1,

பெங்களூரு தக்காளி (கனிந்தது) – 1,

உருளைக் கிழங்கு – 2,

எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் – 1,

உப்பு – தேவையான அளவு,

நறுக்கிய செலரி – கால் கப்,

மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்,

கொத்த மல்லித் தழை – சிறிதளவு.

செய்முறை:

அவகேடோ உருளை மிக்ஸ்டு சாலட்

உருளையை தோல் நீக்கி சிறு சதுரங்களாக நறுக்கி வேக விடவும். இத்துடன் தோல் நீக்கி மசித்த அவகேடோ பழத்தைச் சேர்க்கவும். 

பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் செலரியைச் சேர்த்து வேக விடவும். 

இத்துடன் எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

பிறகு, கொத்த மல்லித் தழையால் அலங்கரித் தால், சுவையான சாலட் தயார்.

குறிப்பு: வெண்ணெய்ப் பழம் என்று அழைக்கப் படும் அவகேடோ, நல்ல கொழுப்புள்ள சுவையான பழமாகும்.

இது குழந்தை களுக்கு நல்லது. அவகேடோ வுடன் பால் சேர்த்து மில்க்‌ஷேக் செய்தால் சுவையாக இருக்கும்.
Tags: