உருண்டை மோர்க் குழம்பு செய்முறை / Sponge Morch Curry Recipe !





உருண்டை மோர்க் குழம்பு செய்முறை / Sponge Morch Curry Recipe !

தேவையானவை:

துவரம் பருப்பு – ஒரு கப்

காய்ந்த மிளகாய் – 4

மிளகு – 6

இஞ்சி – ஒரு சிறு துண்டு

உப்பு – தேவையான அளவு,

கடுகு - அரை ஸ்பூன்

பச்சை மிளகாய் 4,

சீரகம் – 1 ஸ்பூன்

மோர் – 2 கப்

தனியா – 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் – ஒரு கப்

கொத்த மல்லி , கறி வேப்பிலை – சிறிதளவு .

எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

சிறிதளவு 1 ஸ்பூன் துவரம் பருப்பு, பச்சை மிளகாய், சீரகம், தனியா, இஞ்சி, தேங்காய் துருவல் எல்லா வற்றையும் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

உருண்டை மோர்க் குழம்பு

அரைத்த மசாலா விழுது மற்றும் மோர் உப்பு சேர்த்துக் கலக்கவும். மீதி துவரம் பருப்பை நன்றாக ஊற விடவும்.

இதனுடன் காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து பிசையவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையைப் போட்டு கெட்டியாகக் கிளறவும்.

இதனை சிறிய உருண்டை களாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக விடவும்.

கடாயில், கலந்து வைத்த மோர் கலவையுடன் வெந்த உருண்டை களையும் போட்டு, கொத்த மல்லி, கறி வேப்பிலை தூவி,

ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான உருண்டை மோர்க் குழம்பு ரெடி
Tags: