வாழைப்பூ குருமா செய்முறை / Banana Gurma Recipe !





வாழைப்பூ குருமா செய்முறை / Banana Gurma Recipe !

தேவையான பொருள்கள்

சிறிய வாழைப்பூ - ஒன்று

வெங்காயம் - முன்று

தக்காளி - மூன்று

பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, இலை - தாளிக்க

மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்

எண்ணைய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மல்லித் தழை - சிறிதளவு

அரைக்க:

காய்ந்த மிளகாய் - 8

தேங்காய் - மூன்று டேபிள் ஸ்பூன்

சோம்பு - அரை ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

கசகசா - அரை ஸ்பூன்

பூண்டு - ஐந்து பல்

இஞ்சி -சிறு துண்டு

செய்முறை
வாழைப் பூவை பிரித்து இதழ்களின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டி ரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். 

வாழைப்பூ குருமா

அரைக்க வைத்துள் ளவற்றில் வர மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா ஆகிய வற்றை பத்து நிமிடம் கால் டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து

தேங்காய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக இல்லாமல் சற்று நறுக்கவும் 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள் ளாற்றை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
இப்போது தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். எண்ணை பிரிந்ததும் வாழைப் பூவை போட்டு

ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும் இறக்கி மல்லித் தழை தூவவும்.
Tags: