பச்சை மொச்சை கார குழம்பு செய்முறை / Green Sauce Spicy Recipe !





பச்சை மொச்சை கார குழம்பு செய்முறை / Green Sauce Spicy Recipe !

தேவையானவை:

மொச்சைப் பருப்பு – ஒரு கப்

மல்லி தூள் – ஒரு ஸ்பூன்,

சாம்பார் பொடி – 3 ஸ்பூன்,

தேங்காய் விழுது – அரை கப்,

உப்பு – தேவையான அளவு,

புளி – நெல்லிக் காய் அளவு

துவரம் பருப்பு, பாசிப் பருப்பு – தலா அரை கப்

கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் – தாளிப்பதற்க தேவை யான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு.

நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி

செய்முறை:

பச்சை மொச்சை கார குழம்பு

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் வேக வைத்து மசித்து கொள்ளவும் புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்

அதனுடன் சாம்பார் பொடி, மல்லி தூள் , உப்பு சேர்த்து மொச்சையைப் போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாக கொதித்ததும், வேக வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, வெந்தயம் முதலியவற்றி தாளித்துக் கொட்டி கரு வேப்பிலை தூவி பரிமாறவும். சுவையயான குழம்பு ரெடி
Tags: