அருமையான பட்டாணி சிக்கன் கைமா செய்வது எப்படி?





அருமையான பட்டாணி சிக்கன் கைமா செய்வது எப்படி?

அசைவ உணவை சாப்பிடாதவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான சத்துகளை தாவர உணவுகளிலிருந்தும் பெற முடியும். காய்கள், பழங்கள், பருப்பு வகைகள் என ஏகப்பட்ட உணவு வகைகள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இருக்கின்றன.
சிக்கன் கைமா
அந்த வகையில் மனிதர்களுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கும் உணவாக பச்சை பட்டாணி இருக்கிறது. மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். 

அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். பச்சை பட்டாணியில் 'வைட்டமின் கே' சத்து அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் மாற்றும் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது. 

மனிதர்களுக்கு இளமை காலங்களில் தோலில் பளபளப்பும், இளமை தன்மையும் அதிகம் இருக்கும்.வயது ஏறிக்கொண்டு செல்லும் காலத்தில் தோலில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். 

இந்நிலைக்கு முக்கிய காரணம் நமது உணவில் மக்னீசியம் சத்து குறைவதே ஆகும். பச்சை பட்டாணியில் இந்த மக்னீசியம் அதிகமுள்ளது. பட்டாணி தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப் போகிறது. 
கொலஸ்ட்ரால் என்பது உணவில் இருக்கும் தீமையான கொழுப்புகள் உடலில் ரத்தத்தில் படிந்து எதிர்காலத்தில் இதயம் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. 

பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.

சிக்கனில் ஏற்கெனவே நாம் நிறைய வகை ரெசிபிக்களைப் பார்த்திருக் கின்றோம். இன்று பட்டாணி சிக்கன் கைமா இது மிகவும் சுவையாக சற்று வித்தியாச மாகவும் இருக்கும். சரி இப்போது இதை எப்படி செய்வ தென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

சிக்கன் (கொத்துக் கறி) – 250 கிராம்

இஞ்சி , பூண்டு விழுது – 2 ஸ்பூன்

பச்சை பட்டாணி – 1 கப்

பட்டை, லவங்கம், கிராம்பு – தலா 2

தக்காளி – 2
வொங்காயம் – 3

பச்சை மிளகாய் – 5

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மல்லித் தூள் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

கரம் மசாலாத் தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – தேவைக்கு

கொத்த மல்லி – தேவைக்கு
கொரோனாவின் ஆயுட்காலம் எவ்வளவு?
செய்முறை:
பட்டாணி சிக்கன் கைமா
ஒரு பாத்திர த்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்து அதில் வொங் காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். 

அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு மல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், காரம் மசாலாத் தூள் மற்றும் தேவை யான உப்பு போட்டு நன்கு வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட்டு இறக்கினால் மிகவும் சுவையான பட்டாணி சிக்கன் கைமா ரெடி.

குறிப்பு:

சிக்கனை தனியாக வேக வைத்தும் சேர்க்க லாம். காளான், உருளைக் கிழங்கு சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்
Tags: