பொதுவாக அன்றாடம் வீட்டில் நாம் முட்டை சாப்பிடுவது வழமையான விடயமாகும். முட்டையை பல வகைகளில சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் முட்டையை பொட்டேட்டோவுடன் சீஸ் சேர்த்து

பொட்டோட்டோ சீஸ் ஒம்லெட்
ஒம்லெட் போட்டு செய்து சாப்பிட்டு பாருங்கள். அதன் சுவையே தனி தான். சரி இப்போது இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முட்டை - 4

உருளைக்கிழங்கு - ஒன்று

சீஸ் - ஒரு ஸ்லைஸ்

வெங்காயம் - ஒன்று

பச்சைமிளகாய் - ஒன்று

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

வெங்காயத்தை நீளமாக மெல்லியதாக நறுக்கி வைக்கவும். உருளைக் கிழங்கை தோல் சீவி விரல் நீள துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு உருளைக் கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட் களையும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். சீஸை துண்டு களாக்கியோ அல்லது துருவியோ சேர்க்கவும்.

நொண்ஸ்டிக் பேனில் முட்டை கலவையை ஒம்லெட்டாக ஊற்றி மூடி வைத்து வேக விடவும். மற்றொரு புறம் வேக விட அதை மீண்டும் பொறுமையாக திருப்பி மாற்றவும்.

இருபுறமும் வெந்ததும் இறக்கவும். பொட்டோட்டோ சீஸ் ஒம்லெட் தயார்.