டூனா சாண்விட்ச் செய்வது எப்படி? | Canvitc tuna Recipe !





டூனா சாண்விட்ச் செய்வது எப்படி? | Canvitc tuna Recipe !

அநேகமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் இந்த சான்விச். அதிலும் இதை டூனா மீன் கொண்டு தாயாரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
டூனா சாண்விட்ச்
சரி இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பக்கெட் - 2 அல்லது பாண் துண்டுகள்

டூனா மீன் டின் - ஒன்று

சோளம் - ஒரு டின்

கரட் - 2

வெங்காயம் - ஒன்று

மயோனைஸ் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 2

முட்டை - 2

தக்காளி - 2

சாலட் - ஒன்று

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். கரட்டை துருவி வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும்.

டூனா சாண்விட்ச் செய்வது

சாலட்டை சுத்தம் செய்து கழுவி வைக்கவும். முட்டையை வேக வைத்து சிறு துண்டுக ளாக வெட்டவும். 

தக்காளியை கழுவி சிறு துண்டுக ளாக நறுக்கி வைக்கவும். 

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தூனா மீனை சேர்த்து கிளறவும். மீன் நன்றாக வதங்கியதும் கரட் துருவலை சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்த்து கிளறவும்.

அடுப்பில் இருந்து இறக்கி சோளத்தை சேர்த்து கிளறி ஆறிய பின் மயோனைஸ் சேர்க்கவும். 

பக்கெட்டை படத்தில் இருப்பது போல் இரண்டாக வெட்டி சாலட் வைக்கவும். அதனுள் தூனா மீன் கலவையை வைக்கவும்.

பின்னர் அதில் முட்டை துண்டுகள் மற்றும் தக்காளியை துண்டுகளை வைக்கவும். 

மேலே சிறிய சாலட் துண்டை வைத்து மூடவும். சுவையான தூனா மீன் சாண்விட்ச் தயார். 

இது போல பாண் துண்டுகளில் வைத்து ரோஸ்ட் செய்து சாப்பிடலாம்.
Tags: