கேரளா பீஃப் ஃபரை செய்முறை / Kerala Beef Fry !





கேரளா பீஃப் ஃபரை செய்முறை / Kerala Beef Fry !

தேவையான பொருட்கள்

பீஃப் – ½கிலோ கிராம்

சின்ன வெங்காயம் – 1 கப்

இஞ்சி – 1 ½ மேஜைக்கரண்டி

பூண்டு - 1 ½ மேஜைக்கரண்டி

வத்தல் மிளகாய் – 7

மல்லித் தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – ¼தேக்கரண்டி

நல்ல மிளகு தூள் – 1 தேக்கரண்டி

கரமசாலா தூள் - 1 ½ தேக்கரண்டி

சோம்பு தூள் - 1 ½ தேக்கரண்டி
வினிகர் – 2தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தேங்காய் – ¾கப்(துண்டுகளாக வெட்டியது)

கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை
கேரளா பீஃப் ஃபரை
வத்தல் மிளகாயை லேசாக இடித்துக் கொள்ளவும். மாட்டிறச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் தனியே வைக்கவும்.

பின்கு பிரஷர் குக்கரில் மாட்டிறச்சியுடன் 2 மேஜைக்கரண்டி நீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். மாட்டிறச்சியிலுள்ள நீர் வெளியேறாமல் இருந்தால் அந்த நீர் வெளியேறும் வரை மீண்டும் வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தேங்காய் துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.

மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கறிவேப்பிலையை தாளிக்கவும்.

பின்பு அதனுடன் வறுத்த தேங்காய் மற்றும் வேக வைத்த இறச்சியை சேர்த்து குறைந்த தீயில் 15 – 20 நிமிடம் வைத்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் இடையில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பீஃப் ஃப்ரை ரெடி!
Tags: