துவரம் பருப்பு ஆட்டு எலும்பு ரசம் செய்முறை / Dall sheep bone soup !





துவரம் பருப்பு ஆட்டு எலும்பு ரசம் செய்முறை / Dall sheep bone soup !

தேவையானபொருள்கள்

ஆட்டு எலும்பு - 1/2 கிலோ

கத்தரிக்காய் - 150 கிராம்

துவரம் பருப்பு – 100 கிராம்

உருளைக்கிழங்கு - 150 கிராம்

முருங்கை காய் - 2

தக்காளி - கால் கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் – 10

வத்தல் மிளகாய் - 10

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பட்டை - 4

பிரியாணி இலை – 1

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
துவரம் பருப்பு ஆட்டு எலும்பு ரசம்
*ஒரு பாத்திரத்தில் ஆட்டு எலும்பு, துவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள் தூள், சிறிது உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணிர் சேர்த்து வேக வைக்கவும்.
*பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை,பிரியாணி இலை, பச்சைமிளகாய், வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

*அதனுடன் இரண்டு வெங்காயம் , தக்காளியையும் சேர்த்து வதக்கவும். 
*அதனுடன் கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளை கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,

*காய் நன்றாக வதங்கியதும் கலவையுடன் வேகவைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும நன்றாக வெந்ததும் கொத்த மல்லி தழை தூவி இறக்கவும். 

 * இப்போது சுவையான துவரம் பருப்பு ஆட்டு எலும்பு ரசம் ரெடி!
Tags: