முட்டை பஜ்ஜி செய்முறை / Egg patties !





முட்டை பஜ்ஜி செய்முறை / Egg patties !

தேவையான‌ பொருட்க‌ள் :

முட்டை - 3

கடலை மாவு - அரை டம்ளர்

அரிசி மாவு - ஒரு மேசை கரண்டி

காஷ்மீரி சில்லி பொடி - அரை தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ - கால் தேக்கரண்டி

மிளகு தூள் - சிறிது

ரெடி கலர் பொடி - கால் தேக்கரண்டி

இட்லி சோடா - சிறிது

செய்முறை :
முட்டை பஜ்ஜி
முட்டையை வேகவைத்து ஆறியதும் ஒவ்வொரு முட்டையையும் 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். க‌ட் செய்த‌ முட்டையில் சிறிது மிளகு தூள், உப்பு தூவி கொள்ள‌வும். 

ஒரு பாத்திரத்தில் க‌ட‌லைமாவு, அரிசி மாவு, உப்பு, மிள‌காய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், இட்லி சோடா, ரெடிக‌ல‌ர் பொடி அனைத்தையும் ஒன்றாக‌ போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ப‌ஜ்ஜி மாவு ப‌த‌த்தில் க‌ரைத்து கொள்ளவும். 

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு முட்டையாக‌ மெதுவாக‌ உடையாம‌ல் போட்டு எடுத்து பஜ்ஜி மாவுவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க‌வும். சுவையான‌ முட்டை ப‌ஜ்ஜி ரெடி.
Tags: