கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்முறை / Caramel kastartu Pudding !





கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்முறை / Caramel kastartu Pudding !

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்

முட்டை - 4

சீனி - 2 கப்

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

உப்பு - சிட்டிகை

செய்முறை :

பாலை நன்கு காய்ச்சி அதில் 1 1/2 கப் சீனியைப் போட்டு ஆற வைக்க வேண்டும். 4 முட்டையை நன்றாக அடித்து வைக்கவும். ஆறிய பின் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து, 
கேரமல் கஸ்டர்டு புட்டிங்
அதனுடன் அடித்து வைத்த முட்டைகளையும், உப்பையும் சேர்த்து நன்கு அடித்து பாலில் ஊற்றி கலக்கவும். மீதமுள்ள 1/2 கப் சீனியை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

 சீனி உருகி கோல்டன் ப்ரவுன் கலர் சிரப்பாக மாறும் வரை கரண்டியால் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சீனி கேரமல் சிரப்பாக ஆனவுடன் அதனை பேக்கிங் ட்ரேயில் எல்லாப் பக்கமும் படுமாறு ஊற்றவும். 

கேரமல் சிரப் கெட்டியானவுடன் கலந்து வைத்துள்ள பால் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்ய வேண்டும். 

இல்லையெனில் ட்ரேயை அலுமினிய foil - ஆல் மூடி ஆவியில் வேக வைக்கவும். மூடவில்லையென்றால் தண்ணீர் புட்டிங்கிற்குள் போய் விடும். 

நன்றாக வெந்தவுடன் புட்டிங்கை ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறுகையில் புட்டிங்கை கவிழ்த்துப் பரிமாறவும். புட்டிங்கின் மேல் பாகத்தில் கேரமல் அழகாக பரவியிருக்கும்.
Tags: